ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சென்னையில் 10 தபால் நிலையங்களில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய 10 தபால் நிலையங்களில் புதிய வசதி  | ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சென்னையில் 10 தபால் நிலையங்களில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அலுவல கம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை திருத்துவதற் கான வசதியை அஞ்சலகங்கள் மூலம் நடைமுறைப்படுத்த, இந்திய அஞ்சல் துறை மற்றும் 'உடாய்' (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) ஆகியவை ஒப்பந்தம் செய்துள்ளன. நாளை முதல் இதன்படி சென்னையில் 10 அஞ்சலகங்களில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல் களில் திருத்தம் செய்து விவரங் களை மேம்படுத்திக் கொள்ள லாம். ஜூலை 3-ம் தேதி (நாளை) முதல் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை இந்திய அஞ்சல் துறை செய்துள்ளது. இந்த வசதி சென்னை தலைமை அலுவலகம் (ஜி.பி.ஓ), அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், தி.நகர் தலைமை அஞ்சலகம், மயிலாப்பூர் தலைமை அஞ்சலகம், பரங்கிமலை தலைமை அஞ்சல கம், பூங்கா நகர் தலைமை அஞ்சலகம், தேனாம்பேட்டை துணை அஞ்சலகம், அண்ணாநகர் துணை அஞ்சலகம், அசோக் நகர் துணை அஞ்சலகம், திரு வல்லிக்கேணி துணை அஞ்சலகம் ஆகிய நிலையங்களில் செய்யப் பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 2,515 அஞ்சலகங்களில் படிப்படியாக இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments