-->

Tuesday, June 20, 2017

பினாமி சொத்துகளை கண்டுபிடிக்க ஆதாருடன் நிலப் பதிவுகளை இணைப்பது கட்டாயம் தயாராக இருக்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம்

பினாமி சொத்துகளை கண்டுபிடிக்க ஆதாருடன் நிலப் பதிவுகளை இணைப்பது கட்டாயம் தயாராக இருக்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம் | பினாமி சொத்துகளைக் கண்டு பிடிக்க நிலப் பதிவுகளையும் ஆதார் அடையாள எண்ணுடன் இணைக்க தயாராகும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வங்கி கணக்குகளைக் தொடங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்ட நிலை யில், நிலப் பதிவுகளையும் ஆதாருடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் நிலப் பதிவுகளை டிஜிட்டல்மயமாக்கும் படி அனைத்து மாநில அரசு களுக்கும் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா நிலப் பதிவு கள் நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்ப தாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலப் பதிவுகள் உரிமையாளரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படு வதன் மூலம் பினாமி சொத்து களை அம்பலப்படுத்த முடியும் என்றும் இதன் மூலம் நிலப் பதிவு களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர முடியும் என்றும் மத்திய அரசு நம்புவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் சொத்துகள் இணைக்கப்படுவதால், அதன் உரிமையாளரைக் கண்டுபிடிப்பது அதிகாரிகளுக்கு எளிமையாகி விடும். ஆரம்ப கட்ட விசாரணை யின்போதே, அந்த நிலம் உண்மை யான உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா அல்லது பினாமி பெயரில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் வங்கி கடன் வழங்குவது மற்றும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கும் பணிகளிலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது. இதன் காரணமாக கடந்த 1950-ம் ஆண்டு முதலான நிலம் (விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத) வீடுகள் (தனிப்பட்ட நபர்கள் அல்லது சங்கத்துக்கு சொந்தமான) உட்பட அசையா சொத்துகளை விற்றது, வாங்கி யது தொடர்பான பதிவுகள், நிலப் பதிவுகள் ஆகியவற்றை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் டிஜிட்டல்மய மாக்க வேண்டும் என உத்தரவிட்டு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், 'சொத்து களுடன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் ஆதாருடன் இணைக்கப்படாத சொத்துகளின் உரிமையாளர்கள் மீது பினாமி பரிவர்த்தனை (தடை) திருத்தச் சட்டம் 2016-ன் கீழ் உரிய நட வடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் கடந்த 15-ம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செய லாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள், டெல்லி துணை நிலை ஆளுநர், நிதி ஆயோக் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துகளை நேரடியாக பிரதமர் அலுவலகத் துக்கு கடிதமாக அனுப்பி வைக்கும் படியும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு மறுப்பு மத்திய அரசின் பத்திரிகை தகவல் மைய செய்தித் தொடர் பாளர் பிராக் நோரன்ஹா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், 'நிலஆவணங்களில் ஆதாரை இணைப்பது கட்டாயமா கிறது என்று வெளியான சுற்றறிக்கை போலியானது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.