-->

Thursday, June 8, 2017

மானிய கோரிக்கைகள் மீது 24 நாட்கள் விவாதம் நடைபெறும் ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை பேரவை கூட்டம் பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு

மானிய கோரிக்கைகள் மீது 24 நாட்கள் விவாதம் நடைபெறும் ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை பேரவை கூட்டம் பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு | தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஜூன் 14 முதல் ஜூலை 19-ம் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 24 நாட்கள் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வதற்காக பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஆளுங் கட்சி சார்பில் முதல்வர் கே.பழனி சாமி, பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டை யன், செல்லூர் ராஜூ, பி.தங்க மணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன் பழகன் மற்றும் கொறடா ராஜேந் திரன் ஆகியோர் பங்கேற்றனர். திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா அர.சக்கரபாணி, காங்கிரஸ் சார் பில் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முகமது அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் பகல் 12.05 மணி வரை நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு கள் தொடர்பாக நிருபர்களிடம் பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியதாவது: சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 24 நாட்கள் அவை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார் DOWNLOAD

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.