-->

Tuesday, June 13, 2017

வீடு, வணிக நிறுவனங்களுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு ஜூலை 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்

வீடு, வணிக நிறுவனங்களுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு ஜூலை 1 முதல் புதிய திட்டம் தொடக்கம் | வீடு, வணிக நிறுவனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப் பித்தால் ஒரே நாளில் மின் இணைப்பு கொடுக்கும் புதிய திட்டத்தை மின் வாரியம் தொடங்கியுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி நேற்று கூறியதாவது: தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மத்திய அரசின் மின் துறை அமைச்சகத்துடன் இணைந்து 'மின்சார நண்பன்' என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற, கிராமப்புற மின் நுகர்வோருக்கு அவர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள, ஏற்பட உள்ள மின் தடை, பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் தெரிவிக்கப்படும். இதற்காக ஒரு கோடியே 60 லட்சம் மின் நுகர்வோரின் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் கணினி சேவை மையம் மூலம் மின்தடை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்நுகர்வோரின் கைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும், பொதுமக்களின் வசதிக்காக வீடு, வணிக உபயோகத்துக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மின்இணைப்பு கோரும் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் மின் கம்பம் அல்லது மின்பகிர்மான பெட்டியில் இருந்து 100 அடிக்குள் இருந்தால் விண்ணப்பம் அளித்த அதே நாளில் மின்இணைப்பு கொடுக்கப்படும். மின்இணைப்பு கோரும் வீடு, வணிக இடமானது புதைவடம் (கேபிள்) இருக்கும் பகுதியில் அமைந்திருந்தால் விண்ணப்பம் அளித்த 48 மணி நேரத்துக்குள் மின்இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.tangedco.gov.in என்ற இணைய தளம் மூலமோ, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் நேரடி யாகவோ விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப் பிக்கும்போது கட்டணங்களையும் அதிலேயே செலுத்தலாம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் மின் கம்பம் அல்லது மின்பகிர்மான பெட்டியில் இருந்து 100 அடிக்குள் இருந்தால் விண்ணப்பம் அளித்த அதே நாளில் மின்இணைப்பு கொடுக்கப்படும்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.