வார ராசி பலன்கள் | 01-06-2017 முதல் 07-06-2017 வரை

வார ராசி பலன்கள் | 01-06-2017 முதல் 07-06-2017 வரை | மேஷம் ரிஷபம் மிதுனம்  கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் | மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் திறமை கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் வழக்குகளிலும் நல்ல திருப்பம் உண்டாகும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். 5-ல் ராகுவும் 6-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். l அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 1, 4, 5, 6. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு. l நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம், பச்சை. l எண்கள்: 5, 6, 7, 0. l பரிகாரம்: குருப் பிரீதி செய்து கொள்ளவும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.DOWNLOAD

Comments