-->

Friday, May 19, 2017

SSLC (10TH) EXAMINATION RESULTS | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்....பத்தாம் வகுப்பு முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

SSLC (10TH) EXAMINATION RESULTS | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்....பத்தாம் வகுப்பு முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. 08.03.2017 முதல் 30.03.2017 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 19.05.2017 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.



மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS)அனுப்பப்படும்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.