-->

Monday, May 8, 2017

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நேற்று நடந்தது. சென்னையில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் கடும் சோதனைகள் நடத்தப்பட்டன.

நாடு முழுவதும் 'நீட்' தேர்வு நேற்று நடந்தது. சென்னையில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளிடம் கடும் சோதனைகள் நடத்தப்பட்டன. | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. கடுமையான கெடுபிடிகளால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சுமார் 56 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 104 நகரங்களில் அமைக்கப்பட்ட 2,200 மையங்களில் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11.35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியில் 60-க்கும் மேற்பட்ட மையங்களிலும் தேர்வு நடந்தது. விண்ணப்பித்த 88 ஆயிரம் பேரில் 96 சதவீதம் பேர் கலந்துகொண்டனர். சென்னையில் மட்டும் 13 மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாணவ, மாணவிகள் அனைவரும் மிகக் கடுமையான சோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப் பட்டனர். பெரும்பாலான இடங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டனர். தலை முதல் கால் வரை சோதனை செய்யப் பட்டது. மாணவிகளின் தலைமுடிகளை எல்லாம் கலைத்து சோதனை செய்த னர். செயின், கம்மல், மூக்குத்தி, மோதி ரம், கொலுசு, வளையல், பிரேஸ்லெட், ஹேர்பின் உட்பட அனைத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், இவற்றை அணிந்து வந்திருந்த மாணவிகள் அனைத்தையும் கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றனர். மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்துவர தடை விதிக்கப்பட்டிருந் தது. சில இடங்களில் மாணவர்கள் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந் தனர். அவர்களை போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த மாணவர்களின் பெற்றோர், மகனின் சட்டையை கத்தரிக்கோலால் வெட்டி அரைக்கை சட்டையாக மாற்றி னர். அந்த சட்டையை போட்டுக் கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றார். சில இடங்களில் தேர்வு மைய ஊழியர்களே சட்டையை அரைக்கை அளவுக்கு வெட்டிக் கொடுத்தனர். மாணவர்களின் பேன்ட், சட்டையில் இருந்த பெரிய பட்டன்களையும் அகற்றி னர். கடுமையான கெடுபிடிகளால் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவி கள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். காலை 9.30 மணிக்கு பிறகு வந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக் கப்படவில்லை. இதனால் பல இடங் களில் மாணவர்களின் பெற்றோருக்கும் தேர்வு மைய அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 'நீட்' தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்த மதிப்பெண் 720. ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும்படியாக கேள்வித்தாள் அமைந்திருந்தது. தவறான பதில்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வு எழுதிவிட்டு வந்த பெரும் பாலான மாணவ, மாணவிகள் தாவரவி யல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், இயற்பியல் வேதியி யல் பாட கேள்விகள் கடினமாக இருந் ததாகவும் தெரிவித்தனர். பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில் இருந்து தலா 50 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அரசுப் பள்ளியில் படித்தவர்கள், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள், கிராமப்புற மாணவர்கள் தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். பெற்றோர்கள் தரப்பில் கூறும்போது, ''காலை 7 மணியில் இருந்து தேர்வு மையத்தின் வாசலில் காத்திருக்கிறோம். குடிக்க தண்ணீர் உட்பட எந்த ஒரு வசதியும் இல்லை. மாணவர்களையும் கடுமையாக சோதனை செய்கின்றனர். மனதளவில் பாதிக்கப்பட்டால் அவர்களால் எப்படி தேர்வு எழுத முடியும்" என்றனர். சென்னையைச் சேர்ந்த மாணவி ரம்யா கூறும்போது, ''கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்தேன். இப்போது சிபிஎஸ்இ பாடத்தில் 'நீட்' தேர்வு எழுதச் சொன்னால் எப்படி எழுத முடியும்? பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி ஒரு மாதம்தான் ஆகிறது. ஒரு மாதத்தில் 'நீட்' தேர்வுக்கு எப்படி தயாராவது. பயிற்சி மையத்தில் படிக்கலாம் என்றால் ரூ.40 ஆயிரம் கேட்கின்றனர். தேர்வு மிகவும் கடினமாக இருந்தது. நான் சரியாகவே எழுதவில்லை. மருத்துவப் படிப்புக்கு 'நீட்' தேர்வு வேண்டாம். பழைய முறையை கொண்டுவர வேண்டும்'' என்றார். KEY DOWNLOAD

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.