தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வு துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார். பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்த நிலையில் முதன்முறையாக ரேங்க் பட்டியல் இல்லாத தேர்வு முடிவுகள் வெளியானது. பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 15-ம் தேதியிலிருந்து பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி விகிதம்: தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம்
92.1%
மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
89.3%
மாணவிகள் தேர்ச்சி விகிதம்
94.5%
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
0.7% தேர்ச்சி அதிகம்
தேர்வெழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பாடவாரியாக சென்டம் விவரம்:
பாடம்
200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை
கணிதம்
3656
இயற்பியல்
187
வேதியியல்
1,123
கணினி அறிவியல்
1647
வணிகவியல்
8301 (அதிக அளவு முழுமதிப்பெண்)
உயிரியல்
221
தாவரவியல்
22
விலங்கியல்
4
புள்ளியியல்
68
மைக்ரோ பயாலஜி
5
கணக்கு பதிவியல்
5597
வணிக கணக்கு
2551
வரலாறு
336
பொருளாதாரம்
1717

Comments