kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai
Wednesday, May 31, 2017
TRB | Direct Recruitment of Graduate Assistants - 2016 | பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
3 சதவீதத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
3 சதவீதத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்வு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு | மாற்றுத் திறனாளிகளுக் கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகளின் நலனில் தமிழ்நாடு அரசு அக்கறைக் கொண்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை அரசு பணியிடங்களில் பணி அமர்த்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 1981-ம் ஆண்டிலிருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் பார்வை குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்களுக்கு தலா ஒரு சதவீதம் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்களில் 4 சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீதம் இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக தமிழக அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு பணிகளில் செய்யப்படவிருக்கும் 4 சதவீதம் ஒதுக்கீட்டில், பார்வை குறைபாடுடையோர்க்கு ஒரு சதவீதமும்; செவித்திறன் குறைபாடுடையோர்க்கு ஒரு சதவீதமும்; கை, கால் பாதிக்கப்பட்டோர் (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) ஒரு சதவீதமும்; புறஉலக சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் மேலே குறிப்பிட்ட வகைக்குள் வருபவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்டோருக்கு (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) ஒரு சதவீதமும் என ஒதுக்கீடு வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, May 30, 2017
FINAL PROMOTIONAL PANEL FOR COUNSELLING | 2017 - 2018 - SGT TO BT - TAMIL - ENGLISH - MATHS - SCIENCE - HISTORY- GEOGRAPHY - COUNSELLING PANEL
தனியார் பள்ளிகளில் சேர 79 ஆயிரம் விண்ணப்பங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குலுக்கல் முறையில் சேர்க்கை என அரசு தகவல்
தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017
