-->

Thursday, April 27, 2017

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை அரசு மருத்துவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை அரசு மருத்துவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு | மருத்துவ பட்டமேற்படிப்பு மாண வர் சேர்க்கையில் அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலும், தமிழக அரசும் விரிவாக தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மருத்துவ பட்டமேற்படிப்புக் கான மாணவர் சேர்கையின்போது அரசுப் பணியில் உள்ள மருத்துவர் களுக்கு இந்திய மருத்துவ கவுன் சில் விதிமுறைகளின்படி கூடுத லாக 30 சதவீத போனஸ் மதிப் பெண் வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பான மாணவர் சேர்க் கையை தமிழக அரசின் அறிவிப் பாணைப்படி நடத்தாமல், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறை களின்படி நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து தங்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகை கள் பறிக்கப்பட்டுள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனி நீதிபதி பிறப் பித்த இந்த உத்தரவை எதிர்த்து அரசு மருத்துவர்கள் பலர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மேல்முறையீட்டு மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சனும், கே.எம்.விஜயனும் ஆஜராகி வாதிட்டனர். அதேபோல் இந்திய மருத்துவ கவுன்சில் சார் பில் வழக்கறிஞர் வி.பி.ராமனும், தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக் குமாரசாமியும் ஆஜராகி வாதிட்டனர். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ''பட்ட மேற்படிப் பில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாகவும் வழங்கப்படு கிறது. மாநில அரசுக்கு வழங்கப் படும் இந்த 50 சதவீத ஒதுக்கீட் டில், உள்ஒதுக்கீடாக 50 சதவீதம் அதாவது 25 சதவீதம் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவால் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக் கான இடஒதுக்கீடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தவிர இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறை களின்படி மலை மற்றும் கடினமான பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே போனஸ் மதிப்பெண் வழங்க முடியுமே தவிர, இதர கிராமப்புறங்களில் பணிபுரிபவர் களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க இயலாது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்'' என வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், ஏற் கெனவே தமிழக அரசு நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது உள்ள அரசியல் சூழலில் நீட் தேர்வை ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். மேலும் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலும், தமிழக அரசும் விரிவாக தங்களது பதில் மனுக்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.