-->

Monday, April 17, 2017

தமிழக தபால் வட்டத்தில் கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்

தமிழக தபால் வட்டத்தில் வேலை தமிழக தபால் வட்டத்தில் 128 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய தபால் துறை, தமிழக தபால் வட்டத்தில் கிராம தபால் சேவகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் சேலம் மேற்கு ஆகிய இடங்களில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 128 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 71 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன. கடலூரில் 37 இடங்களும், திருவண்ணாமலைக்கு 40 இடங்களும், திருநெல்வேலிக்கு 27 இடங்களும், சேலம் மேற்கிற்கு 24 பணியிடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-5-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://in-diapost.gov.in, http://www.appost.in/gdsonline/Home.aspx என்ற இணையதள பக்கங்களை பார்க்கலாம்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.