முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மூ.ராஜாராம் உள்பட 5 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக பதவி ஏற்பு

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மூ.ராஜாராம் உள்பட 5 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக பதவி ஏற்பு | முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மூ.ராஜாராம் உள்பட 5 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக அருள்மொழி உள்ளார். இந்த தேர்வாணையத்திற்கு 14 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்கள் பதவிக்காலம் 6 வருடம். 2016-ம் ஆண்டு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மூ.ராஜாராம், பி.கிருஷ்ண குமார், எம்.மாடசாமி, ஏ.வி. பாலுசாமி, ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், என்.பி.புண்ணியமூர்த்தி, ஏ.சுப்பிரமணியன், வி.ராமமூர்த்தி ஆகிய 11 பேரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக தமிழக கவர்னர் நியமித்தார். இந்த நியமனம் வெளிப்படையானது அல்ல என்றும் இந்த உறுப்பினர்களின் நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 11 பேரின் நியமனம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் நீக்கப்பட்ட அந்த 11 பேரில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மூ.ராஜாராம், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் டாக்டர் பி.கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற மின்துறை கண்காணிப்பாளர் ஏ.சுப்பிரமணியன், அரசு வக்கீல் வி.சுப்பையா, முன்னாள் மாவட்ட குற்றப்பிரிவு அரசு வக்கீல் ஏ.வி.பாலுசாமி ஆகிய 5 பேரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களாக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவ் நியமித்தார். இதையொட்டி நேற்று அந்த 5 உறுப்பினர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் பதவி ஏற்றனர்.

Comments