-->

Thursday, April 27, 2017

தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் 3 மாத காலம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் 3 மாத காலம் தற்காலிகமாக ஒத்திவைப்பு | தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் 'வாபஸ்' பெறப்பட்டது. போராட்டத்தை 3 மாத காலம் தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், நேரடி பேச்சுவார்த்தையின் கீழ் ஊதிய மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. நேற்றும் போராட்டம் நடந்தது. இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்துக்கு உடனே வருமாறு அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கு நேற்று மாலை அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினருடன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேநேரம் வருவாய்த்துறை சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த அவசர பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தரப்படுவதாக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை செயலகத்தில் இருந்து சங்க பிரதிநிதிகள் புறப்பட்டு சென்றனர். அதனைத்தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள சங்க அலுவலகத்தில் வேலை நிறுத்தத்தை தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து நேற்று இரவு சங்க பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அரசின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை கைவிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அன்பரசு 'தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:- தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்கள் கோரிக்கைகளை உடனடியாக செங்கோட்டையன் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றார். சில நிமிடங்களிலேயே அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு 3 மாதங்களுக்குள் (ஜூலை) எங்களது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். எனவே அரசின் வாக்குறுதியை நம்பியும், மக்கள் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் இந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவெடுத்து இருக்கிறோம். ஜூலை மாதம் இறுதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.