-->

Tuesday, April 4, 2017

எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு

எஸ்ஆர்எம் பல்கலை. நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிப்பு | எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மேலாண்மை உள் ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தில் பி.டெக்., எம்.டெக். உள் ளிட்ட படிப்புகளுக்கு எஸ்ஆர்எம் ஜெஇஇஇ நுழைவுத் தேர்வை யும், எம்பிஏ படிப்புக்கு எஸ்ஆர்எம் ஜெஇஇஎம் நுழைவுத் தேர்வையும், சுகாதார அறிவியலில் இள நிலை, முதுநிலை படிப்புகளுக்கு எஸ்ஆர்எம்ஜெஇஇஹெச் நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டியது கட்டாயம். இந்த நுழைவுத் தேர்வு களில் மாணவர்கள் பெறும் மதிப் பெண்களின் அடிப்படையிலேயே சென்னை, ஹரியாணா, ஆந்திர மாநிலம் அமராவதி ஆகிய இடங்களில் உள்ள 4 எஸ்ஆர்எம் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர முடியும். 123 மையங்கள் இந்த நுழைவுத் தேர்வுகள் இன்று (ஏப்ரல் 1) தொடங்கி ஏப்.30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. நாடு முழுவதும் உள்ள 118 மையங்களிலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 மையங்களிலும் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப் பது கடந்த மார்ச் 21-ம் தேதியே தொடங்கிவிட்டது. இதுவரை 1.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது இம்மாத இறுதிக்குள் 2 லட் சத்தை தாண்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. விண்ணப்பிக்கும் தேதியைப் பொறுத்து மாண வர்கள் நுழைவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தவறான விடைக்கு மதிப் பெண்ணை குறைக்கும் நெகட்டிவ் மார்க்கிங் முறை இந்த ஆண்டுமுதல் நீக்கப்படுகிறது. அதே சமயம் ஒரு மாணவர் நுழைவுத் தேர்வை சரியாக எழுதவில்லை என நினைத்தால் மேலும் 2 முறை நுழைவுத் தேர்வை எழுதலாம். அவரது 3 நுழைவுத் தேர்வு மதிப்பெண்களில் எது அதிகமோ அது பரிசீலனைக்கு ஏற்கப் படும். நுழைவுத் தேர்விலும், சிபிஎஸ்இ, மாநில பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.