-->

Monday, April 17, 2017

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 22-ம் தேதி இணையதளத்தில் வெளியீடு சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 22-ம் தேதி இணையதளத்தில் வெளியீடு சிபிஎஸ்இ அறிவிப்பு | நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 7-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. மார்ச் 1-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் விண்ணப்பிப்பது முடிவடைந்தது. தமிழகத்தில் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் உட்பட நாடுமுழுவதும் 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் (அனுமதி சீட்டு) ஏப்ரல் 15-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வயது உச்சவரம்பை நீக்கிய உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர். கடந்த 5-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்தது. இதனால் நீட் தேர்வு ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 22-ம் தேதி cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஜூன் 8-ல் முடிவு: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடுமுழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரும் 22-ம் தேதி cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடப்படும்

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.