நவீன தொழில்நுட்பத்தில் ரூ.1000 கோடியில் ‘மகாபாரதம்’ திரைக்காவியம் 2018-ல் சூட்டிங்: 2020-ல் வெளியிடத் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தில் ரூ.1000 கோடியில் 'மகாபாரதம்' திரைக்காவியம் 2018-ல் சூட்டிங்: 2020-ல் வெளியிடத் திட்டம் | இந்தியாவின் மிகப் பெரும் இதிகாசங் களுள் ஒன்றான மகாபாரதம், 1,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் திரைப்படமாக வரும் 2020-ம் ஆண்டில் வெளிவர இருக்கிறது. மனித வாழ்வின் மகத்துவத்தையும், வாழ்வியல் முறையையும் கற்றுக் கொடுக்கும் ராமாயணம் மற்றும் மகாபார தம் ஆகிய இரண்டும் இந்தியாவின் மிகப்பெரும் இதிகாசங்கள். சரித்திர கதை அம்சங்கள் கொண்ட இதில் வரும் கதாபாத்திரங்கள், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஏற்கெனவே பல்வேறு முறை திரைப்படங்களான எடுக்கப்பட்டுள்ளன. சின்னத்திரைகளில் இப்போதும் இவை சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மகாபாரதத்தை இன்றைய காலகட்ட நவீன தொழில்நுட் பத்தில், அடுத்த தலைமுறையும் ரசிக்கும் வகையில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றி ஐக்கிய அரபு எமிரேட்டில் "யு.ஏ.இ. எக்ஸ்சேஞ் மற்றும் என்.எம்.சி. ஹெல்த்கேர்" எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சேர்மன் ரகுராம் ஷெட்டி கூறியதாவது: இந்தியாவின் புராண இதிகாசத்தை யும், கலை, மற்றும் கலாச்சாரத்தை உலகுக்கு பறைசாற்றும் நோக்கிலும் மகாபாரதத்தை திரைக்காவியமாக எடுக்க முடிவு செய்துள்ளோம். பெரும் பொருட்செலவில் "தி மகாபாரதம்" எனும் பெயரில் திரைக்காவியமாக தயா ராகக் கூடிய இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு (2018) செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இரண்டு பாகமாக தயாராகும் இப்படம் வரும் 2020-ம் ஆண்டு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன் னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகும் படம், இந்தியாவின் மற்ற மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். இப்படத்தை பிரபல திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான வி.ஏ. குமார் மேனன் இயக்குகிறார். அவர் கூறும்போது, இந்தப் படத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றி கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். தற்போது அதற்கான தருணம் வந்துள்ளது. இப்படம் அடுத்த தலைமுறையினர் விரும்பும் வகையில் தரமாகவும், காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையிலும் இருக்கும் என்றார். பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள எம்.டி.வாசு தேவன் நாயர், திரைக்கதை எழுதி வரு கிறார். அவர் கூறும்போது, மகாபாரத காவியத் திரைப்படம் 100-க்கும் மேற் பட்ட மொழிகளி்ல் வெளியாகும். உலகில் சுமார் 300 கோடி மக்களை இப்படம் சென்றடையும் எனத் தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகளும், வெளிநாட்டு நடிகர்களும் நடிக்கின்றனர். இதற்கிடையே, புராண கால படமான பாகுபலி-1,2 படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றுள்ள இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, மகாபாரதத்தை, திரைப்படமாக எடுப்பதற்காக திட்டமிட்டுள்ளார். இதற்காக பாலிவுட் நடிகர் அமீர்கானுடன் அவர், இந்தப் படம் குறித்து ஆலோசித்துள்ளார்.

Comments