எஸ்சி, எஸ்டி ஆணையங்களில் ஏராளமான பணியிடங்கள் காலி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

எஸ்சி, எஸ்டி ஆணையங்களில் ஏராளமான பணியிடங்கள் காலி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி | எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தேசிய ஆணையங்களில் காலியாக உள்ள பதவி களை நிரப்ப வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப் பட்டன. காலையில் மாநிலங் களவை கூடியதும், சிறுபான்மை யினருக்கான தேசிய ஆணைய தலைவர் மற்றும் அனைத்து உறுப் பினர் (5) பதவிகளும் காலியாக இருப்பது பற்றி காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திர புதானியா பிரச்சினை எழுப்பினார். இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று தெரிவித்த அவர், காலி இடங்களை நிரப்பும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து நாடாளு மன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறும் போது, "இந்த பிரிவின் கீழ் ஏற் கெனவே உள்ள சீக்கியம், புத்தம், பார்சி, கிறிஸ்து, முஸ்லிம் ஆகிய வற்றுடன் ஜெயின் சமூகத் தைச் சேர்ந்த பிரதிநிதியையும் சேர்க்க முடிவு செய்யப்பட் டுள்ளது. விரைவில் காலி இடங்கள் நிரப்பப்படும்" என்றார். பின்னர் மார்க்சிஸ்ட் உறுப் பினர் சீதாராம் யெச்சூரி பேசும் போது, "சிறுபான்மையினர், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான 4 தேசிய ஆணையங்களிலும் தலைமை பதவி காலியாக உள்ளது" என்றார். பின்னர் சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டு, காலி இடங் களை நிரப்ப வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அவையை ஒத்தி வைத்தார். பின்னர் அடுத்தடுத்து 3 முறை அவை கூடியபோதும் இதை நிலை நீடித்ததால் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது நிதி மசோதா மீது விவாதம் நடை பெற்றது. மனநல மசோதா நிறைவேற்றம் மனநல சுகாதார மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா பதில் அளித்து பேசும்போது, "மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தரமான சிகிச்சை பெறுவதற் கான உரிமையை இந்த மசோதா வழங்குகிறது. மேலும் தற்கொலை முயற்சியை குற்றமாக கருதி தண்டனை வழங்குவதிலிருந்தும் விலக்கு அளிக்கிறது" என்றார். இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Comments