-->

Tuesday, March 21, 2017

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6, 7 தேதிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வழிகாட்டி முகாம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6, 7 தேதிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வழிகாட்டி முகாம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழி காட்டும் வகையில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் வழிகாட்டி முகாம் கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். ஏப்ரல் 6, 7-ல் இந்த முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கள் மற்றும் மாவட்ட கல்வியி யல் ஆராய்ச்சி நிறுவன விரிவுரை யாளர்களுக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, ''எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட் டும் வகையில் முகாம் நடத்தப் படுவது நாட்டிலேயே இது முதல் முறை. இந்த வழிகாட்டி முகாம் கள் தமிழகம் முழுவதும் வட் டாரத்துக்கு ஒன்று என்ற அளவில் 500 இடங்களில் நடத்தப்படும். இதன்மூலம் கிராமப்புற மாண வர்கள் பெரிதும் பயன் பெறு வார்கள்'' என்றார். முன்னதாக, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றுப் பேசும்போது, ''இந்த வழிகாட்டி முகாம்களில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்'' என்றார். விழாவில் பயிற்சி கையேட்டை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் வெளியிட, முதல் பிரதியை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.உதயச் சந்திரன் பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு பாடநூல் கழக நிர் வாக இயக்குநர் மைதிலி ராஜேந் திரன், செயலர் கார்மேகம், அனை வருக்கும் கல்வி திட்ட மாநில இயக் குநர் பூஜா குல்கர்னி, மத்திய இடை நிலைக் கல்வி திட்ட (ஆர்எம்எஸ்ஏ) மாநில இயக்குநர் ஜி.அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆய்வக உதவியாளர் நியமனம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவியில் 4,362 காலியிடங்களை நிரப்ப கடந்த 2015 மே 31-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் அரசு தேர்வுத் துறை நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 2 ஆண்டுகள் நெருங்கி யும் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தேர்வு குறித்து 10 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கடந்த 2-ம் தேதி அறிவித்தார். அதன் பிறகும் முடிவுகள் வெளியிடப்படாதது குறித்து, நேற்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் அரசாணை வெளியிடப்படும்'' என்றார். எழுத்துத் தேர்வுக்கு பிறகு நேர்காணல் நடத்தி, அதன்மூலம் ஆய்வக உதவியாளர்களை தேர்வு செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நேர்காணல் மட்டுமின்றி, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டே ஆய்வக உதவியாளர் நியமனம் நடக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படுமா அல்லது எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்குமா என்பது அரசாணையில் தெரிவிக்கப்படும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை வழங்குவதற்கான பயிற்சி கையேட்டை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட, முதல் பிரதியை பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
செய்தித் துளிகள் | LATEST NEWS
  • 21/3/2017 | பள்ளி கல்வித்துறைக்கு போதிய ஆசிரியர்கள் உடனடி நியமனம் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | 6 மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 
  • 21/3/2017 | எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து வழி காட்டும் வகையில் ஏப்ரல் 6, 7 தேதிகளில் வழிகாட்டி முகாம் கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார். ஏப்ரல் 6, 7-ல் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
  • 21/3/2017 | ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர்பாக 2 அல்லது 3 நாட்களில் அரசாணை வெளியிடப்படும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல். நியமனத்துக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் சேர்க்கப்படுமா அல்லது எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், கூடுதல் கல்வித்தகுதி, பணிஅனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் இருக்குமா என்பது அரசாணையில் தெரிவிக்கப்படும்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.