ஜூலை 1 முதல் பொருட்களின் விலை குறையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு

ஜூலை 1 முதல் பொருட்களின் விலை குறையும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேச்சு | ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாகும் என நம்பிக்கை இருக்கிறது. இதன் மூலம் பொருட்களின் விலை குறை யும் மற்றும் வரி ஏய்ப்பும் தடுக்கப் படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். காமன்வெல்த் நாடுகளுக்கான தலைமை தணிக்கை அதிகாரிகளின் 23-வது மாநாட்டில் கலந்து கொண்ட ஜேட்லி மேலும் கூறியதாவது: வரி செலுத்தாத சமூகமாகவே இந்தியா இருந்து வருகிறது. இதன் காரணமாக பண மதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டு, ரொக்க பணப்புழக்கம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்வது குறையும். இதுபோன்ற சீர்திருத்தங்களால் இந்தியா 7 முதல் 8 சதவீத வளர்ச்சி அடையும். மேலும் உலகில் வேக மாக வளர்ச்சி அடையும் நாடு என்கிற பெயரும் இந்தியாவுக்கு கிடைக்கும். ஆனால் சில சவால் களும் நமக்கு இருக்கின்றன. கச்சா எண்ணெயில் இருக்கும் ஏற்ற இறக்க சூழல், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு மற்றும் தனியார் முதலீடுகள் குறைவாக இருப்பது உள்ளிட்ட சில சவால்கள் இருக்கின்றன. மிகவும் வலுவான தொழில்நுட்ப பின்னணியுடன் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த இருப்பதால் வரி ஏய்ப்பு செய்வது கடிமானகும். இந்தியாவில் செய்யப்படும் மிகப் பெரிய வரி சீர்திருத்தம் இதுவாகும். வரிக்கு வரி செலுத்துவது ஜிஎஸ்டியில் கிடையாது என்பதால் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணம் குறையும். இந்தச் சட்டம் நாடாளுமன்றத் தின் ஒப்புதலுக்காக காத்திருக் கிறது. அனுமதி கிடைத்தவுடன் இந்த ஆண்டு மத்தியில் அமல் படுத்தப்படும். இதன் மூலம் வரி செலுத்தாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நேரடி வரியை பொறுத்தவரை ரொக்கப் பரிவர்த்தனைக்கு அதிக பட்ச தொகை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. லஞ்சம்,ஊழல், தீவிர வாதம் உள்ளிட்ட செயல்களுக்கு ரொக்கப்பணம் பயன்படுத்தப்படு கிறது. இதற்காக பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்பட்டது. மேலும் இதன் மூலம் அடையாளம் இல்லா மல் புழக்கத்தில் இருந்து வந்த பணத்துக்கு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதன் மூலம் அடையாளம் கிடைத்துள்ளது. வரும் காலத்தில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு உயரும். அதிலும் முறையான பொருளா தாரத்தின் பங்கும் அதிகரிக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக உலகில் அதிக வளர்ச்சி அடையும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருந்தது. இதே வேகத்தில் இந்தியா செல்லும். 7 முதல் 8 சதவீத வளர்ச்சி சிறப் பானதுதான் என்று ஜேட்லி கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி முதன் முதலாக 2006-ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது.

Comments