-->

Thursday, March 9, 2017

தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு 1,111 பட்டியல் நாளை வெளியிடுகிறது தேர்வு வாரியம்

தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு 1,111 பட்டியல் நாளை வெளியிடுகிறது தேர்வு வாரியம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பள்ளிக் கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 632 பின்னடைவு பணியிடங்கள் (பேக்லாக் வேகன்சி), அனைவருக் கும் இடைநிலை கல்வி திட்டத்தின் (ஆர்எம்எஸ்ஏ) கீழ் 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (மொத்தம் 1,111) 2012, 2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகள் மற்றும் 2014-ல் நடைபெற்ற சிறப்புஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. இந்நிலையில், ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தற்போது கூடுதலாக வேறு இளங் கலை பட்டம் பெற்றவர்கள், ஏற் கெனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பிஎட் படித்த ஆண்டே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணிக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கோரி விண்ணப் பித்துள்ளனர். எனவே, ஏற்கெனவே நடத்தப் பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் (மெரிட் லிஸ்ட்) ஆசிரி யர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளி யிடப்படும். இந்த விவரங்களை ஆன்லைனில் சரிபார்த்துக்கொள்ள லாம். பதிவு எண் தெரியாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு விவரங்களை அறிய லாம். எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை இணைய தளத்தின் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள். தங்களின் ஒருசில விவ ரங்களை திருத்தம் செய்ய வேண்டுமானால் அதை ஆன்லைனி லேயே மேற்கொள்ளலாம். தங்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டு விவரங்களை மீண்டும் சரிபார்த்து புகைப்படம் மற்றும் கையொப்பத் துடன் உறுதிச்சான்றினை தர வேண் டும். மேற்கண்ட விவரங்களை 10-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இணையதளத்தில் சரிபார்த்து ஆன்லைனில் திருத்தமும் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூல மாகவே திருத்தம் செய்யப்பட வேண்டும். நேரடியாகவோ, எழுத்து மூலமாகவோ பெறப்படும் விண் ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எக்காரணம் கொண்டும் இது போன்ற வாய்ப்புகள் மீண்டும் தரப் படாது. அதேபோல், காலநீட்டிப்பும் அளிக்கப்படாது. மேற்கண்டவாறு சரிபார்க்கப்பட்ட விவரங்களைக் கொண்டு இறுதி தகுதிப்பட்டியல் தயார் செய்யப்படும். இந்த பட்டியலைக் கொண்டுதான் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.