-->

Monday, February 20, 2017

TMB RECRUITMENT 2017 | தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி வாய்ப்பு ...விண்ணப்பிக்க கடைசி நாள் 22-2-2017..விரிவான விவரங்கள்

மெர்க்கண்டைல் வங்கியில் பணி | முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது கிளார்க் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். முதுநிலை பட்டதாரிகள் 26 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 31-10-2016-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனு மதிக்கப்படும். கலை, அறிவியல், வர்த்தகம் சார்ந்த பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 22-2-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை குறிப்பிட்ட முகவரிக்கு 28-2-2017-ந் தேதிக் குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.tmbnet.in/tmb&-careers என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.