வனவர், கள உதவியாளர் பதவிக்கான தற்காலிக பட்டியல் வனத்துறை இணையதளத்தில் வெளியீடு

வனவர், கள உதவியாளர் பதவிக்கான தற்காலிக பட்டியல் வனத்துறை இணையதளத்தில் வெளியீடு | தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் வனவர், கள உதவியாளர் பதவிக்கான இறுதிக்கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வுக்கு, உடற் தகுதி மற்றும் நடைத் தேர் வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தற்காலிகப் பட்டியல், வனத்துறையின் இணைய தளத்தில் (http://forests.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அனைவருக்கும் பதிவஞ்சல் மூலம் இதுதொடர்பான குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடம், தேதி மற்றும் நேரத்தில், நேர்முகத் தேர்வில் தவறாது கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments