புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணி விரைவில் முடியும்

புதிய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணி விரைவில் முடியும் | பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பிறகு புதிய ரூபாய் நோட்டுகளை சந்தையில் விடும் பணி தொடங் கியது. இந்த பணி விரைவில் முடிவடைய இருப்பதாக பொரு ளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பணம் எடுப்பது தொடர்பான அனைத்து விதி முறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. சேமிப்பு கணக்கில் வாரம் 24,000 ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்னும் விதி மட்டும் இன்னும் இருக்கிறது. இந்த விதியும் விரைவில் நீக்கப்படும். பணப்புழக்கம் மற்றும் பண நிர்வாகம் ஆகியவை ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள் ஆகும். இந்த விதிமுறைகளை எப்போது நீக்குவது என்பதை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். இப்போதைக்கு வாரத்துக்கு 24,000 ரூபாய் எடுக்க முடியும் என்பது மட்டுமே ஒரே விதியாகும். சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களில் மிகச் சிலர் மட்டுமே மாதத்துக்கு ஒரு லட்ச ரூபாய் எடுப்பார்கள். அப்படிப் பார்த்தால் இந்த 24,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்னும் விதியால் பெரிய பாதிப்பு இல்லை. விரைவில் இந்த கட்டுப்பாடும் நீக்கப்படும். பண மதிப்பு நீக்கம் அறிவிக் கப்பட்டு 90 நாட்களுக்குள் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன என்று சக்திகாந்த தாஸ் கூறினார். முன்னதாக நடப்பு கணக்கு மற்றும் ஓவர் ட்ராப்ட் கணக்கு களுக்கான ஏடிஎம் விதிமுறை களை ரிசர்வ் வங்கி நீக்கியது. அதேபோல சேமிப்பு கணக்கு களுக்கான ஏடிஎம் விதிமுறை களையும் விரைவில் நீக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. பணமதிப்பு நீக்கம் செய்த போது ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 2,000 ரூபாயும், வாரத்துக்கு 10,000 ரூபாயும் எடுக்க முடியும். நடப்பு மற்றும் ஒவர் டிராப்ட் கணக்குகளில் வாரம் 50,000 ரூபாய் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதித்தது. நவம்பர் மாத இறுதியில் சேமிப்பு கணக்கில் இருந்து வாரம் 24,000 ரூபாய் எடுக்க முடியும் என்று விதியை தளர்த்தியது. ஜனவரி மாத தொடக்கத்தில் ஏடிஎம்களில் இருந்து ஒரு நாளைக்கு 4,500 ரூபாய் எடுப்பதற்கு அனுமதி வழங்கியது. ஜனவரி 16-ம் தேதி ஏடிஎம் களில் இருந்து தினசரி 10,000 ரூபாயும், வாரத்துக்கு 24,000 ரூபாயும் எடுக்கலாம் என விதியை தளர்த்தியது. நடப்பு மற்றும் ஓவர் டிராப்ட் கணக்குகளில் வாரத்துக்கு ஒரு லட்ச ரூபாய் எடுக்கலாம் என விதியை தளர்த்தியுள்ளது.   

Comments