-->

Wednesday, February 22, 2017

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியீடு.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியீடு | சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 112 பேர் தேர்வு | சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 112 பேர் தேர்வு பெற்றுள்ளனர். நேர்முக தேர்வு மார்ச் 20-ந் தேதி தொடங்குகிறது. அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டுதோறும் ..எஸ்., .பி.எஸ்., .ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. முதலில் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். அதன்படி 1,079 பணியிடங்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சம் பேர் எழுதினார் கள். முதல்நிலை தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த செப்டம்பர் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் 15 ஆயிரத்து 445 பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடந்தது. மெயின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 961 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு டெல்லியில் மார்ச் 20-ந் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் ..எஸ்., .பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. அந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 84 பேர் மாணவர்கள், 28 பேர் மாணவிகள். இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ..எஸ்., .பி.எஸ்., .ஆர்.எஸ்., இந்திய வனப்பணி தேர்வுகளிலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1, குரூப்-2 மற்றும் சிவில் நீதிபதிகள் பணிகளுக்கான தேர்வுகளிலும், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட தேர்வுகளிலும் இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 831 பேர் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (புதன்கிழமை) முதல் சென்னை-35, சி..டி.நகர் முதல் பிரதான சாலையில் இருக்கும் எமது மையத்தில் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். www.saidais.com என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு நேர்முக தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அனைத்து வசதிகளும் இலவசமாக செய்துதரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.