பணமதிப்பு நீக்க பிரச்சினை விரைவில் சரியாகும் அருந்ததி பட்டாச்சார்யா கருத்து

பணமதிப்பு நீக்க பிரச்சினை விரைவில் சரியாகும் அருந்ததி பட்டாச்சார்யா கருத்து | பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட நெருக்கடிகள் இந்த மாத இறுதிக்குள் சரியாகும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித் தார். வங்கியின் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் வேலூர் மருத் துவமனைக்கு கருவிகள் வழங்கு வதற்காக சென்னை வந்திருந்த அருந்ததி பட்டாச்சார்யா செய்தி யாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு பிறகு 4 முதல் 6 வாரங் களுக்கு நெருக்கடிகள் இருந் தன. ஆனால் தற்போது 85 சதவீத நெருக்கடிகள் குறைந்துவிட்டன. பிப்ரவரி மாத இறுதிக்குள் நிலைமை சீரடையும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. அதில் முக்கியமானது மின்னணு முறை பரிவர்த்தனை. அதே சமயத்தில் கிராமப்புறங்களிலும் மின்னணு பரிமாற்ற முறை நடைமுறைக்கு வர சில மாதங்களாவது ஆகும். வங்கிகளில் டெபாசிட் அதிகரித் தன் மூலம் வங்கிகள் கடன் வழங்கும் திறன் உயர்ந்துள்ளது. தவிர வட்டி விகிதங்கள் குறைவ தற்கான வாய்ப்புகளும் உருவாகி யுள்ளன. முன்னதாக பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடக் கத்தில் வங்கியின் இதர பணி களும் பாதிக்கப்பட்டன. வங்கி பணியாளர்கள் பொதுமக்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும் பணியில் ஈடுபட்ட தால், தனிநபர் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன் பணிகள் தேங்கின. வீட்டுக்கடன் அளிக்க முடியாத சூழலில் வீடுகள் விற்பனையும் குறைந்தன. இதனால் கட்டுமான திட்டங்கள் தேக்கமடைந்தன. வங்கிப் பணிகள் தேக்கத்தால் அதைச் சார்ந்த துறைகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. பட்ஜெட் எதிர்பார்ப்பு குறித்து பேசுகையில், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உள் கட்டமைப்பு துறைக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கலாம் என் றும், விவசாயம் மற்றும் குறைந்த விலை வீடுகள் திட்டங்களுக்கான மானியங்கள் குறித்து எதிர் பார்ப்பதாகவும் கூறினார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச் சியில் உயர்வகுப்பு வாடிக்கை யாளர்களுக்கான முதலீடு ஆலோசனையை வழங்கும் 'எஸ்பிஐ எக்ஸ்குளூசிவ்' வங்கி சேவையை தொடங்கி வைத் தார். மேலும் சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் டிரான்சிட் காம்போ கார்டு, ரங்கம் கோயிலில் -உண்டிகள் உள்ளிட்ட மின்னணு சேவை களையும் அறிமுகப்படுத்தினார். சென்னை மெட்ரோ டிரான்சிட் கார்டு மூலம், வழக்கமான வங்கிச் சேவைகளுடன், மெட்ரோ ரயிலுக்கான கட்டணத்தையும் செலுத்தலாம். மெட்ரோ நிலைய இயந்திரத்தில் இந்த கார்டை காட்டினால் உள்ளே நுழையவும், வெளியே செல்லவும் அனுமதி கிடைக்கும். இந்த அட்டையில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகையிலிருந்து பயணக் கட்டணம் கழித்துக் கொள்ளப் படும். ரங்கம் கோயிலில் மின்னணு முறையில் உண்டியல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.100, ரூ.500, ரூ.2000 என்கிற வகையில் செலுத்தலாம். இந்த -உண்டியலில் பணத்தை செலுத்தியதும் அதற்கான ரசீதையும் இயந்திரம் வழங்கும்.

Comments