மத்திய பட்ஜெட் 2017 | முக்கிய அம்சங்கள் ...

1.       கிராமப்புற பகுதிகள், கட்டுமானம், வறுமையை ஒழித்தல் ஆகிய துறைகளில் நிதி கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2.       விவசாய துறை 4.6 சதவீத அளவுக்கு வளர்ச்சி அடையும். விவசாயத்துக்காக ரூ.10 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
3.       அந்நிய நேரடி முதலீடு 36% உயர்ந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 36,100 கோடி டாலர் அளவில் இருக்கிறது. அடுத்த 12 மாதங்களுக்கு இது போதுமானது.
4.       இதுவரை இல்லாத அளவுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5.       கிராமப்புற, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 24% உயர்வாகும்.
6.       2019-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடுகள்.
7.       ஆர்சனிக் மற்றும் புளுரைடால் பாதிக்கப்பட்ட 28,000 குடியிருப்புகளுக்கு அடுத்த 4 ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
8.       பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின் கீழ் ஒரு நாளுக்கு 133 கீமி சாலை அமைக்கப்படுகிறது. 2011-14 காலகட்டத்தில் 73 கீமி மட்டுமே அமைக்கப்பட்டது.
9.       மூத்த குடிமக்களுக்கான ஆதார் அட்டையில் அவர்களது உடல்நலம் குறித்த விவரங்கள் விரைவில் இடம்பெரும்.
10.   ஜார்க்கண்ட் மற்றும் குஜராத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்.
11.   3,500 கீமி தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
12.   ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து.
13.   அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயில் ரயில் பாதுகாப்பு நிதி அமைக்கப்படும்.
14.   மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் 500 ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப்படும்.
15.   புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
16.   அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நீக்கப்படுகிறது.
17.   உள் கட்டமைப்புத் துறைக்காக ரூ.3,96,135 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
18.   ஒடிஷா மற்றும் ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
19.   டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக உருவாக்கப்பட்ட 'பிம்' செயலியை 1.25 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
20.   வணிகர்களுக்கான 'ஆதார் பே' செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
21.   நாட்டை விட்டு வெளியேறிய பொருளாதார குற்றவாளின் சொத்துகளை ஜப்தி செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்படும்.
22.   பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஆகும்.
23.   அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.2%. 2018-19 உள்ளிட்ட அடுத்த 3 நிதி ஆண்டுக்கு நிதிப் பற்றாக்குறை இலக்கு 3%.
24.   வரி ஜிடிபி விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கிறது. வரி செலுத்தாத சமூகமாக இருப்பதால், நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு அதிக சுமையாக இருக்கிறது

Comments