மத்திய பட்ஜெட் 2017 | தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத் துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் அத்தி யாயம் 8, பிரிவு 87ஏ-ன் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.2,500 வரி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.3 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் பல்வேறு வரிச்சலுகைகளின்படி தனிநபர்கள் ரூ.4.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரிவிலக்கு பெற முடியும். ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரிவிதிப்பும் தொடரும்.

Comments