இரண்டாவது வீட்டுக்கு வரிச்சலுகை ரூ.2 லட்சம் மட்டுமே மத்திய அரசு திட்டவட்டம்

இரண்டாவது வீட்டுக்கு வரிச்சலுகை ரூ.2 லட்சம் மட்டுமே மத்திய அரசு திட்டவட்டம் | இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்ச ரூபாய் வரை மட்டுமே வரிச்சலுகை வழங்க முடியும். அதற்கு மேல் வரிச்சலுகை வழங்குவது தேவையற்றது என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவதுகூடுதலாக பணம் வைத்திருப்ப தால் வீடு வாங்குகிறார்கள். இதற்கு மேல் வரிச்சலுகை வழங்க முடி யாது. தவிர இந்த வரிச்சலுகை பெரும்பாலும் தவறாக பயன் படுத்தப்படுகிறது. முதல் முறை வீடு வாங்கு பவர்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதில் பயன் உள்ளது. ஆனால் இரண்டாம் வீட்டில் உரி மையாளர் தங்குவதில்லை, தவிர அந்த வீட்டின் மூலம் அவருக்கு வாடகையும் கிடைக்கிறது. அரசாங்கத்துக்கு இருக்கும் நிதி குறைவானது. கூடுதலாக பணம் வைத்திருப்பவர் முதலீடு செய் வதற்காக அரசாங்கம் வரிச்சலுகை வழங்க முடியாது. இந்தியாவில் வீடு இல்லாமல் பலர் இருக்கும் போது, இது போன்ற சலுகைகளை அரசு வழங்க முடியாது. வீடு இல்லாத வர்களுக்கு அரசு உதவ வேண்டும் என ஹஷ்முக் ஆதியா கூறினார். நிதி மசோதா (2017) படி ஆண்டுக்கு வட்டி மூலமான வரிச் சலுகை ரூ. 2 லட்சம் மட்டுமே (முதல் மற்றும் இரண்டாம் வீட்டுக் கும் சேர்ந்து) வழங்கமுடியும் என திருத்தப்பட்டுள்ளது. முன்பு இரண்டாவது வீட்டை கடனில் வாங்கி இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டு வாடகையை வருமானமாக காண்பித்து வரிச்சலுகை பெறலாம். அதாவது இரண்டாவது வீட்டுக்கு கட்டும் வட்டியை, வீட்டு வாடகை வருமானத்தில் கழித்த பிறகு இருக்கும் தொகையை வீடு வாங்கியவரின் மொத்த வருமானத்தில் கழித்துக்கொள்ள லாம்.

Comments