ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்னும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. பல முடிவுகள் இணையதளத்தில் தான் வெளியிடப்படுகின்றன. பத்திரிகைகளுக்கு தகவல் கொடுப்பதில்லை. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வினியோகிப்பது தொடர்பாக அனைத்து விவரங்களும் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை டி.பி.ஐ. அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யர் தலைமையில் நடக்க உள்ளது.

Comments