தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன இ-சேவை மையங்களில் ஆதார் விவரம் திருத்தம் செய்யும் வசதி 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன -சேவை மையங்களில் ஆதார் விவரம் திருத்தம் செய்யும் வசதி 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது | தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தமிழகம் முழுவதும் அரசு -சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் (ரிப்பன் மாளிகை), மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் -சேவை மையங்களில், ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, பொதுமக்கள் மேற்கண்ட மையங்களுக்கு நேரில் சென்று, தங்களது ஆதார் எண்ணைத் தெரிவித்து கைரேகை அல்லது கருவிழியை பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்களை மாற்றி கொள்ளலாம். இதற்கான சேவை கட்டணமாக ரூ.25 மட்டும் வசூலிக்கப்படும். மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Comments