கூடுதல் அம்சங்களுடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கூடுதல் அம்சங்களுடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி அறிவிப்பு | பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை திரும்பப்பெற்ற மத்திய அரசு, அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை அச்சிட்டு வருகிறது. மேலும் பணப்புழக்கத்தை அதிகரிக்க 100 ரூபாய் போன்ற சிறிய தொகையிலான நோட்டுகளும் கூடுதலாக அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மகாத்மா காந்தி வரிசை-2005-ல் ஏற்கனவே வெளியிடப்பட்ட 100 ரூபாய் நோட்டுகளை ஒத்து இருக்கும் வகையில் இந்த புதிய நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. இந்த 100 ரூபாய் நோட்டுகளின் வரிசை எண் பகுதியில் 'ஆர்' என்ற ஆங்கில எழுத்து இடையில் வருமாறும், அச்சிடும் வருடமான '2017' நோட்டின் பின்னால் வருமாறும் உருவாக்கப்படுகிறது. ரூபாய் நோட்டு வரிசை எண்ணின் அளவு ஏறுமுகம், பெரிதான அடையாளக்குறி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெறுகிறது. இந்த நோட்டுகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தை தாங்கி வரும் என கூறியுள்ள ரிசர்வ் வங்கி, புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அனைத்து வகையான 100 ரூபாய் நோட்டுகளும் சட்டப்படி செல்லும் என்றும் அறிவித்துள்ளது.

Comments