வாக்காளர்களுக்கு தேவையான தகவலுடன் புதிய மொபைல் செயலி தேர்தல் ஆணையம் அறிமுகம்

வாக்காளர்களுக்கு தேவையான தகவலுடன் புதிய மொபைல் செயலி தேர்தல் ஆணையம் அறிமுகம் | வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மொபைல் போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில் வாக்காளர் பட்டியலில் எப்படி பெயர் சேர்ப்பது, குறிப்பிட்ட தொகுதியில் எங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்பது முதல் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த செயலி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. வாக்காளர்கள் அந்தச் செயலியை தரவிறக்கம் செய்து வேட்பாளர்கள் வேட்புமனுவின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களையும் நேரடியாக பார்க்க முடியும். கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள், அப்போது வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது இந்த செயலி வாக்காளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குசாவடி மையங்கள், வாக்காளர் அடையாள சீட்டுகள் ஆகியவற்றையும் வாக்காளர்கள் தாங்களாகவே நகல் எடுக்க முடியும் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு ECI ஆப் என பெயரிடப்பட்டுள்ளது.Comments