சினிமா படப்பிடிப்புகள் ரத்து

சினிமா படப்பிடிப்புகள் ரத்து | திரைப்பட கூட்டமைப்பு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு மற்றும் வீரத்தின் அடையாளமாக விளங்குவது ஜல்லிக்கட்டு. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும், தமிழ் கூறும் மக்களாலும் நடத்தப்பட்டு வரும் ஏறுதழுவுதல் என்ற இந்த வீர விளையாட்டு தொன்மையான நம் ரத்தத்தில் ஊறிய நிகழ்வு. இந்த வீர விளையாட்டை நடத்த விடாமல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்திய அன்னிய நிறுவனம் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தியும் இந்தியாவின் எதிர்காலமாகவும், நாளைய தேசமாகவும் இருக்கும் இளைய பாரதத்தினர், மாணவர்களை ஆதரித்தும் இன்று (19-ந் தேதி) அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவை இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இன்று திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான எந்த பணிகளும் நடைபெறாது என்று தெரிவித்துக்கொள்கிறோம்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.Comments