ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் | தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், கடந்த 21-ம் தேதி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆளுநர் உரையுடன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில், திருத்தச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்தார். பின்னர் அன்றைய தினமே, 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை முதல்வர் .பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Comments