பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | வெளிநாட்டு அமைப்பான பீட்டா வுக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்ற ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்குமாறு தமிழக இளைஞர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டு தங்கள் உணர்வு களை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதி களிலும் இளைஞர்கள் திரண்டது டன், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விட்டு மத்திய, மாநில அரசுகளுக்குத் தங்கள் எதிர்ப் புணர்வை வெளிப்படுத்தி யுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்வோம் என்று வாக்குறுதி அளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன், தன்னுடைய இயலாமையை ஏற்று வெளிப்படை யாக மன்னிப்பு கோரியுள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித் தார். ஆனால், தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்து வதற்காக திரண்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மதுரை மாவட் டம் அலங்காநல்லூரில் இன்று (ஜன. 16) காவல்துறை தடியடி நடத்தியது கடும் கண்டனத்துக் குரியது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். ஜல்லிக் கட்டு போட்டிகளை இன் றைய காலத்திற்கேற்ப உத்வேகத் துடனும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளை மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு தனது கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தை கலைத்துவிட்டு, தமிழகத்துக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும். தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாக வும் செயல்படும் வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவின் பண்பாட்டுக்கூறுகளையும், தொன்மையான அடிப்படைக் கருத்தியலையும் உணராத வெளிநாட்டு அமைப்புகள் வேறு உள்நோக்கங்களுடன் இந்த மண்ணில் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் சட்டப் பூர்வமான அனுமதியுடன் ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக மத்திய அரசு செயல்படவேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பண்பாட்டுக்கூறுகளையும், தொன்மையான அடிப்படைக் கருத்தியலையும் உணராத வெளிநாட்டு அமைப்புகள் வேறு உள்நோக்கங்களுடன் இந்த மண்ணில் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.Comments