-->

Friday, January 6, 2017

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் என்ஜினீயரிங் பாடப்புத்தகம் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு கொண்டு வருகிறது

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் என்ஜினீயரிங் பாடப்புத்தகம் அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு கொண்டு வருகிறது | தமிழ் மொழி உள்ளிட்ட மாநில மொழிகளில் என்ஜினீயரிங் பாடப்புத்தகங்களை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு கொண்டுவருகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு டெல்லியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அலுவலகம் இயங்குகிறது. இது ஆங்கிலத்தில் சுருக்கமாக ஏ.ஐ.சி.டி.இ. என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு மாநிலத்திலும் புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்கவேண்டும் என்றாலும் எந்த பாடம் தொடங்கவேண்டும் என்றாலும் ஏ.ஐ.சி.டி.இ.யிடம் தான் விண்ணப்பிக்கவேண்டும். அந்த அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பொறியியல் கல்லூரிகளை பார்வையிட்ட பின்னர் அனுமதி அளிப்பார்கள். தமிழ் மொழியில் என்ஜினீயரிங் பாடம் இப்போது பெரும்பாலான கல்லூரிகளில் ஆங்கிலத்தில்தான் என்ஜினீயரிங் பாடம் எழுதப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் உயர் கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. அவற்றில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் மாநில மொழியில் கல்வி கற்றால் அவர்களுக்கு நன்றாக புரியும் என்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட 22 மாநில மொழிகளில் பாடப்புத்தகம் எழுதவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி இது சம்பந்தமான கோரிக்கையை ஏற்றார். இதையடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இளைஞர் சமுதாயம் நாட்டின் வளர்ச்சியை முன் எடுத்து செல்லும் என்றும், மாநில மொழிகளில் பொறியியல் பாடப்புத்தகங்கள் என்ற கோரிக்கையை ஆழ்ந்து பரிசீலனை செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஐரோப்பிய நாடுகளில் தாய் மொழியில்தான் கல்வி கற்கிறார்கள். இந்தியாவும் மாநில மொழிகளில் பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளது. மாநில மொழிகளில் கல்வி கற்கவேண்டும் என்ற தேவை, நீண்டநாள் கோரிக்கையாக இந்தியாவில் உள்ளது. அவ்வாறு மாநில மொழிகளில் பாடம் எழுதினால் கிராமத்து மாணவ-மாணவிகள் அதிகம் பயன்அடைவார்கள். எனவே ஏ.ஐ.சி.டி.இ. நிறுவனம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தாய் மொழியில் என்ஜினீயரிங் பாடங்களை எழுதிகொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பொறியியல் பாடத்தையும் ஆங்கிலத்தில் இருந்து மாநில மொழிகளில் மொழி பெயர்க்க ஆசிரியருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் குறைந்த பட்சம் 50 பாடப்புத்தகம் எழுத வேண்டும். இந்த தகவலை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.