ஏப்ரலுக்கு பிறகே தேர்தலை நடத்த முடியும் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிப்பு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

ஏப்ரலுக்கு பிறகே தேர்தலை நடத்த முடியும் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிப்பு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் | உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் வரை நீட்டிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுவதால் அதன் பிறகே உள்ளாட்சித் தேர் தலை நடத்த முடியும் என அந்த மசோதாவில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப் பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கால அட்ட வணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு தடை விதித்தது. எனவே, உள்ளாட்சி அமைப்பு களின் நிர்வாகத்தை கவனிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது சட்டப்பேரவைக் கூட் டம் நடைபெறாததால் கடந்த அக்டோபர் 17-ம் தேதி இதற் கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பள்ளிக் கட்டிடங்களையும், ஆசிரியர்களையும் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது. ஏப்ரல் மாதத்தில் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் முடிவடைந்த பிறகே தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுறுவதை கணக்கில்கொண்டு அவர்களது பதவிக் காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்து கடந்த டிசம்பர் 27-ம் தேதி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக தமிழ்நாடு ஊராட்சி திருத்தச் சட்ட மசோதா பேர வையில் அறிமுகம் செய்யப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பள்ளிக் கட்டிடங்களையும், ஆசிரியர்களையும் உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு பயன்படுத்த முடியாது.

Comments