-->

Friday, January 20, 2017

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு | ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பள்ளி வாகனங்கள் ஓடாததால் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:- தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனங்கள், ஆட்டோக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து நர்சரி பள்ளிகள், பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இளங்கோவனும் இன்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக தெரிவித்து உள்ளார். அரசு பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டதற்கு, 'திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். அதேபோல் மற்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாமா? என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.