-->

Wednesday, January 11, 2017

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு | வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் Pan அட்டைகளை, அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெருகிவரும் லஞ்சம், ஊழல் மற்றும் கருப்புப் பண பதுக்கலுக்கு எதிராக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து மத்திய அரசு அண்மையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் Pan அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் Pan அட்டைகளை அளிக்காதவர்கள் வருமான வரிச் சட்டத்தின்படி, Form-60 எனப்படும் படிவம் 60- பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பூஜ்யம் இருப்பு எனப்படும் அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.