ஜல்லிக்கட்டு தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்க இயலாது - ஏற்கெனவே உள்ள வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்குவதற்கு சாத்தியமில்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு


ஜல்லிக்கட்டு தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்க இயலாது - ஏற்கெனவே உள்ள வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்குவதற்கு சாத்தியமில்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு | ஜல்லிக்கட்டு தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்க இயலாது என்றும், ஏற்கெனவே உள்ள வழக்கின் தீர்ப்பை உடனடியாக வழங்குவதற்கு சாத்தியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழர்களின் பாரம்பிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, அதன் முக்கிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என்றும், எனவே, தடைநீக்கம் தொடர்பான வழக்கு குறித்து உடனடியாக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த கோவிலன் பூங்குன்றன் என்ற வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச், உடனடியாக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்றும், புதிய மனுவையும் விசாரிக்க சாத்தியமில்லை என்றும் தெரிவித்தனர்Comments