எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்த நாள் சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு | எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலை சென்னையில் வெளியிடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல் வர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள அவரது முழு உருவச் சிலை வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா வில் கலந்துகொள்வதற்காக காலை 8.30 மணியளவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வருகை தந்தார். எம்ஜிஆரின் சிலைக்கு கீழே வைக் கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய அஞ்சல் துறையின் இயக்குநர் டி.மூர்த்தி எம்ஜிஆரின் சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட, அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலை யின் விலை ரூ.15. இந்த அஞ்சல் தலையில் எம்ஜிஆர் சிரித்துக் கொண்டிருக்கும் படம் பொறிக் கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடை பெற்ற இடத்திலேயே அஞ்சல் தலை விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான அதிமுகவினர் சிறப்பு அஞ்சல் தலையை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.Comments