மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!

மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி! | மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணியிடங்கள் நிரப்பப் படுகின்றன. இந்தப் பணிக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 1884
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது .டி.. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 09.01.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: மாதம் ரூ.5,200 - 20,200 + இதர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: http://pwd.rrcnr.org.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2017ஆன்லைன்
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2017- 28.02.2017
மேலும் விவரங்களுக்கு: http://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdfComments