அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு | அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நாளை தொடங்குகிறது. அரசு பொறியியல் கல்லூரி களில் சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட என்ஜினியரிங் பாடப் பிரிவுகளிலும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவுகளிலும் 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 27,635 பேர் எழுதினர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் ஜனவரி 6-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதமும் இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யப்பட்டது. யாருக்கும் அழைப்புக்கடிதம் தபாலில் அனுப்பப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 19, 20-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் உள்ள அமைந் துள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நாளையும், நாளை மறுநாளும் (வியாழன், வெள்ளி) நடைபெறு கிறது. ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண் ணப்பதாரர்கள் அழைக்கப்பட் டுள்ளனர். ஒரே கட் ஆப் மதிப் பெண் பெற்றவர்களும் சான்று சரி பார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப் பதாக ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் உறுப்பினர்-செயலர் உமா அறிவித்துள்ளார்.Comments