-->

Wednesday, January 11, 2017

ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தமிழக என்ஜினீயருக்கு ஆஸ்கார் விருது

ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தமிழக என்ஜினீயருக்கு ஆஸ்கார் விருது | ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கோவையை சேர்ந்த என்ஜினீயர் சிறந்த தொழில் நுட்பத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். திரையுலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி நடக்கிறது. இதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் விருதுகளை தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் நிறுவனம் கடந்த 4-ந்தேதி அறிவித்தது. இதில் 18 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த என்ஜினீயர் கிரண்பட் (வயது 41) என்பவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கதாபாத்திரங்களின் முகபாவனைகள் இவர் ஹாலிவுட் படங்களான அவெஞ்சர்ஸ், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், ஸ்டார் வார்ஸ் எபிசோட்-7, ஸ்டார் வார்ஸ் ராக் ஒன், வார்கிராப்ட் உள்பட பல்வேறு படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் முகபாவனைகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றும் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டார். இதனால் அவருக்கு தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. கிரண்பட் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு பாயல்பட் என்ற மனைவியும், 4 வயதில் மேகனா, புவனா என்ற இரட்டைக்குழந்தைகளும் உள்ளனர். தனியார் நிறுவனம் கிரண்பட் அமெரிக்காவில் லூம் டாட் .. என்ற நிறுவனத்தை நடத்தி வருவதுடன், அதன் மூலம் ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரங்களின் முகபாவனைகளை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே கோவையை சேர்ந்த கொட்டலாங்கோ லியான் (45) என்பவர் இதே துறையில் கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'ஆஸ்கார் விருதுக்கு கிரண்பட் தேர்வு செய்யப்பட்டு உள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அடுத்த மாதம் 11-ந்தேதி அமெரிக்காவில் அவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாங்கள் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ளோம்' என கிரண்பட்டின் பெற்றோர் தெரிவித்தனர்.



No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.