மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்), பிளஸ் 2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 1.8.2017 தேதியன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு ரூ. 5,200 முதல் ரூ. 20,200/ 40,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
பணியின் பெயர்: மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff (MTS) Non Technical)
காலிப்பணியிட விவரம்: தமிழகம் - 453
பிற மாநிலங்கள்- 7847.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்களுக்கு முன்னதாக எழுத்துத் தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். விண்ணப்பிக்கும் முறை பொது, .பி.சி. பிரிவினர் ரூ. 100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.1.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 16.04.2017, 30.04.2017, 07.05.2017
மேலும் விவரங்களுக்கு: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/mtsfinalnotice301216.pdfComments