டென்மார்க்கில் இருந்து 59 காளைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன இனப்பெருக்கத்துக்காக நடவடிக்கை

டென்மார்க்கில் இருந்து 59 காளைகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன இனப்பெருக்கத்துக்காக நடவடிக்கை | டென்மார்க்கில் இருந்து 59 காளை மாடுகள் இனப்பெருக்கத்திற்காக விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டன. இந்தியாவில் உள்ள பசுமாடுகளை டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாட்டு காளை மாடுகளுடன் இணைய செய்து, அந்த இனப்பெருக்கத்தின் மூலம் அதிகமான அளவு பால் உற்பத்தி செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனை தேசிய பால் உற்பத்தி வளர்ச்சி கழகத்தின் மூலமாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் டென்மார்க் நாட்டில் இருந்து தோகா வழியாக 95 காளை மாடுகள் தனி விமானம் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றில் 36 காளை மாடுகள் கொல்கத்தாவில் இறக்கப்பட்டன. மீதமுள்ள 59 காளை மாடுகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. பள்ளிக்கரணையில் பரிசோதனை சென்னை சரக்ககப்பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட டென்மார்க் நாட்டு காளை மாடுகள் சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள தென்மண்டல கால்நடைகள் தனித்து சோதனை செய்யும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு காளை மாடுகளுக்கு தொற்று நோய்கள் இருக்கிறதா? என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 30 நாட்களுக்கு பின்னர் அவை குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறன. இதுபற்றி தென்மண்டல கால்நடைகள் தனித்து சோதனை செய்யும் மைய அதிகாரிகள் கூறியதாவது:- தொற்று நோய் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ெ-்டன்மார்க் மற்றும் ஜெர்மனியில் இருந்து காளை மாடுகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கொண்டு வரப்படும் மாடுகள் 30 நாட்கள் சோதனை மையத்தில் வைத்து பரிசோதனை செய்யப்படும். இந்தியாவில் சென்னை மட்டும் இன்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரூ, கொல்கத்தா ஆகிய 6 இடங்களில் சோதனை மையங்கள் உள்ளன. இங்கு காளை மாடுகளுக்கு தொற்று நோய் உள்ளதா?, வேறு ஏதாவது நோய் கிருமிகள் இருக்கிறதா? என்்பது கண்டறியப்படும். இதற்காக டென்மார்க் நாட்டு காளை மாடுகளின் ரத்தம் மற்றும் விந்து சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப் படும். 45 லிட்டர் பால் அந்த பரிசோதனைகளில் எந்தவித நோய் கிருமிகளும் இல்லை என தெரிய வந்த பின்னர் இவை ஆமதாபாத்தில் உள்ள தேசிய பால் உற்பத்தி வளர்ச்சி கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த காளை மாடுகள் இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படும். இந்த மாடுகள் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படும் போது பசு மாடுகள் தினமும் 45 லிட்டர் வரை பால் தரும். காளை மாடுகளை இனப்பெருக்கத்துக்காகதான் கொண்டு வரப்பட்டதே தவிர வேறு எதற்கும் கொண்டு வரப்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments