-->

Monday, January 2, 2017

45 நாட்களில் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.41,523 கோடி டெபாசிட் வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்

45 நாட்களில் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.41,523 கோடி டெபாசிட் வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்தனர் | ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப்பின் ஜன்தன் வங்கி கணக்குகளில் 45 நாட்களில் மட்டும் ரூ.41,523 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜன்தன் கணக்குகள் வங்கி சேவையை அதிகரிக்கவும், நாட்டு மக்கள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்குவதற்காகவும் மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 'பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த ஜன்தன் கணக்குகளில் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இவ்வாறு தொடங்கப்பட்ட பெரும்பாலான வங்கி கணக்குகளில் மக்கள் பணம் போட்டு இருந்த நிலையில், கணிசமான எண்ணிக்கையிலான கணக்குகள் பூஜ்ஜிய தொகையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றன. ரூபாய் நோட்டு வாபஸ் இந்த நிலையில் கருப்பு பண பதுக்கலை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டத்தை கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் அறிவித்தார். மக்கள் தங்களிடம் இருக்கும் மேற்படி ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளவும் மத்திய அரசு வழிமுறைகளை அறிவித்தது. இதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை ஏராளமான அளவில் தங்கள் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தனர். அதன்படி ஜன்தன் கணக்குகளிலும் ஏராளமான பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2 வாரங்களில் அதிகம் இந்த கணக்குகளில் கடந்த நவம்பர் 9-ந்தேதிப்படி ரூ.45,637 கோடி பணம் இருந்தது. பின்னர் கடந்த மாதம் 23-ந்தேதி வரையிலான 45 நாட்களில் மட்டும் ரூ.41,523 கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டு, மொத்தம் சுமார் ரூ.87,100 கோடி அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ஜன்தன் கணக்குகளின் டெபாசிட் தொகை தற்போது ஏறக்குறைய இரட்டிப்பு ஆகி இருக்கிறது. இதில் 4.86 லட்சம் கணக்குகளில் நவம்பர் 30-ந்தேதி வரை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 2 வாரங்களில் மட்டுமே ரூ.20,224 கோடி அளவுக்கு டெபாசிட் குவிந்துள்ளது. அதன்பிறகு படிப்படியாக இந்த தொகை குறைந்துள்ளது. கடும் நடவடிக்கை இதற்கு மத்திய அரசின் அறிவிப்பும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பெரும் செல்வந்தர்கள் பலர் அடுத்தவரின் ஜன்தன் கணக்குகளில் தங்கள் கருப்பு பணத்தை டெபாசிட் செய்வது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் வருமான வரிச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என நவம்பர் 18-ந்தேதி அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய குறுகிய காலத்தில் ஜன்தன் கணக்குகளில் அதிகபட்ச தொகை டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவில், மேற்படி கணக்குகளில் அடுத்தவரின் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. திருப்பி எடுத்துள்ளனர் இதற்கிடையே ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பெருந்தொகையில் இருந்து கணிசமான தொகை எடுக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.3,285 கோடி எடுக்கப்பட்டு இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு இருக்கிறது. பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த கணக்குகளில் இருந்து மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த சூழலில், எவ்வாறு இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.




No comments:

Guestbook

Enter your email address:முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு புதிய செய்தி இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

இங்கே பதிவு செய்தப்பின், உங்கள் INBOX க்கு வரும் லிங்க்கை கிளிக் செய்தால் தான் புதிய செய்தி இமெயில்களை பெற முடியும்.