தமிழகத்தில் 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியீடு | பருவமழை பொய்த்து போனதையடுத்து தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து மாவட்ட வாரியாக அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினர் களஆய்வு செய்து கடந்த 9-ந்தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், வடகிழக்கு பருவ மழை குறைவாக தமிழகத்தில் பெய்துள்ளதால், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தகுதி இருக்கிறது என்று கூறி அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரியும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதுதவிர அனைத்து துறைகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணையை வெளியிட்டு உள்ளது.Comments