வீட்டுக்கடனுக்கு திட்டமிடுபவர்கள் 3 மடங்கு உயர்ந்திருப்பதாக எஸ்பிஐ அறிவிப்பு

வீட்டுக்கடனுக்கு திட்டமிடுபவர்கள் 3 மடங்கு உயர்ந்திருப்பதாக எஸ்பிஐ அறிவிப்பு | கடந்த வாரம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடன்களுக்கான வட்டியை 0.90 சதவீதம் குறைத் தது. அதனை தொடர்ந்து வீட்டுக் கடனுக்காக திட்டமிடுபவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே கடனுக்கான வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந் திருக்கிறது. குறிப்பாக பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு கடன் கொடுப் பதில் எந்த முன்னேற்றமும் இல்லை. வட்டி குறைப்பு செய்திருப்பதால் கடன் வழங்குவதில் கவனம் செலுத்தி வருவதாக எஸ்பிஐ நிர்வாக இயக்குநர் ரஜினீஷ் குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: கடன் கேட்டு மக்கள் இப்போதுதான் வங்கிக்கு வரத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக வீட்டுக்கடன் குறித்து அதிக விசாரிப்புகள் இருக்கிறது. வட்டி குறைப்பு செய்த பிறகு இணையம் மூலமாக வீட்டுக்கடன் குறித்த விசாரிப்புகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வட்டி குறைப்புக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. வீட்டுக்கடன் சந்தை உயரும் பட்சத்தில், அது பொருளாதாரத்துக்கு மிகவும் நல்லது. பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு டெபிட் கார்டு பயன்பாடு 3.5 மடங்கு அதிகரித்திருக்கிறது. அதேபோல வாலட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந் திருக்கிறது. கடந்த வருடம் 1 லட்சம் பாயிண்ட் ஆப் சேல் இயந் திரங்களை நாங்கள் வழங்கினோம். ஆனால் பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு 45,000 இயந்திரங்களை பொறுத்தி இருக்கிறோம். நடப் பாண்டுக்கு 2 லட்சம் இயந்திரங் களை பொறுத்த இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். 75 கோடி டெபிட் கார்டுகள் இருக் கின்றன. இதில் 45 கோடி கார்டுகள் அதிகம் பயன்படுத்துபவையாக உள்ளன. அதனால் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் மிகவும் முக்கியம். இதன் மூலம் பொருட்கள் வாங்கும் போது, பணத்துக்கான தேவை குறையும். பணத்தை கையாளுவதற்கு ஆகும் செலவுகளும் குறையும் என ரஜினீஷ் குமார் கூறினார். 1997-ம் ஆண்டுக்கு பிறகு கடன் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்திருப்பது இப்போதுதான். சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கி தகவல்படி கடந்த டிசம்பர் கடன் வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதம். ஆனால் கடந்த டிசம்பரில் 10.6 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.Comments