பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.


பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது:-
§வரும் மார்ச், ஏப்ரல் மாதத் தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப் பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) இன்றுமுதல் (புதன் கிழமை) 29-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
§ஹால் டிக்கெட் பிரின்ட் அவுட் என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்து விட்டு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் போதும்.
§மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments